தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் சமீபகாலமாக சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து அதில் தனது திறமையை வெளிக்காட்டி மிகப்பெரிய வெற்றிப் படங்களாக கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு நடித்து வெளிவந்த பிகில் திரைப்படம் சுமார் 300 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது.
இதையடுத்து கைதி படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் தளபதிவிஜய். இப்படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.சினிமாவில் விஜயை தொடர்ந்து அவரது மகன் சஞ்சய் சினிமா திரையுலகில் கால்பதிக்க ரெடியாகி உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தயாரிக்கும் படத்தில் விஜயின் மகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்காக இடம் பர்மிஷன் வாங்கி உள்ளதாக தகவல் ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் அவர்கள் தனது சிறந்த நடிப்பின் மூலம் தமிழகத்தையும் தாண்டி கர்நாடகா, கேரளா என பிற மாநிலங்களிலும் அதிக ரசிகர்கள் பலத்தை தக்க வைத்துள்ளார் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் தற்போது இவரது மகனும் சினிமா களத்தில் இறங்கஉள்ளார்.
இவரும் திரை களத்தில் இறங்கினால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர் மேலும் ரசிகர்கள் சஞ்சய் அவர்கள் அப்பாவை போலவே இவரும் சினிமாவில் நீண்ட நாள் பயணம் செய்வார் என கூறிவருகின்றனர்.