தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக ஓடி கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் படத்தின் இரண்டு கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் சைலண்டாக போய்க்கொண்டிருக்கிறது.
லியோ திரைப்படம் முழுக்க முழுக்க பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தளத்திற்கு 8 மணிக்கு வர சொன்னால் 7 மணிக்கு எல்லாம் வந்து விடுவாராம் சூட்டிங் நேரத்தை எப்பொழுதுமே தவற விடமாட்டாராம் இதனால் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பிடித்த நடிகராக சிவாஜிகணேசன் இருந்தார்.
இவருக்கு அடுத்த அதை சரியாக செய்து வருபவர் விஜய் என கூறப்படுகிறது. பகவதி படத்தை இயக்குனர் வெங்கடேஷ் எடுத்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு எப்பொழுது வரவேண்டும் என விஜய் ஒரு முறை கேட்டாராம் இயக்குனரோ 8.30 மணிக்கு நான் வருவேன் நீங்கள் 9. 30 மணிக்கு வாருங்கள் என கூறிவிட்டாராம்..
அடுத்த நாள் காலையில் இயக்குனர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வர லேட்டாக வந்தாராம். விஜய் வந்திருக்க மாட்டார் என நினைத்தார் ஆனால் விஜயையும் நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு வந்து விட்டாராம் இதை தெரியாத இயக்குனர் அங்கு தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு கட்டத்தில் டெக்னீஷனை கூப்பிட்டு விஜய் எப்பொழுது வந்தார் என கேட்க அவர் 8 மணிக்கு வந்து விட்டார் என கூறினாராம். படப்பிடிப்பு தளத்தில் நேரம் தவறவிடாமல் வரக்கூடியவர் விஜய் என புகழ்ந்து பேசினாராம் இந்த செய்தியை செய்யாறு பாலு சமீபத்தில் தெரிவித்தார்.