தமிழ் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவர் இயக்குநர் ஏஆர் முருகதாஸ். முதலில் அஜித்தைவைத்து தீனா படத்தை இயக்கி வெற்றி கண்டதன் முலம் சினிமாவில் என்ட்ரி ஆனார். அதன் பிறகும் இவர் எடுத்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட தோடு மட்டுமில்லாமல் சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்திக்கொண்டு தற்போது வலம் வருகிறார்.
பல முன்னணி நடிகர்களை இன்னும் உச்சத்திற்கு கொண்டு சேர்ந்த இயக்குநர் ஏஆர் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரின் படங்கள் கிடைக்காததால் தற்போது தெலுங்கு, கன்னட பக்கம் திசை திருப்பியுள்ளார். இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் தனது நீண்ட நாள் ஆசை உலக நாயகன் கமலுடன் எப்படியாவது இணைந்து ஒரு திரைப்படத்திலாவது பணியாற்றி விட வேண்டும் என்பது தான்
இதற்காக ஏ ஆர் முருகதாஸ் மூன்று திரைக்கதைகளை எழுதி வைத்துள்ளார் அதில் ஒன்றை கமலுக்கு சொல்ல காத்திருந்த நிலையில் தற்போது அது நடந்துள்ளது சமீபத்தில் கமலை நேரில் சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் கன்னட சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் யாஷ் அவர்களும் ஒரு கதையை நேரில் சந்தித்து சொல்லி உள்ளார் அந்த படத்தை மிகப் அளவில் உருவாக்க பல விஷயங்களையும் அவரிடமே குறிப்பிட்டு பகிர்ந்து உள்ளார்.
ஆனால் இந்த படத்திற்கான அறிவிப்புகள் இன்னும் வெளிவராமல் இருக்கிறது அது வந்தால் முருகதாஸின் பயணம் இன்னும் சினிமாவில் உச்சத்தை தொடும் எனவும் கூறப்படுகிறது.