ஒன்பது வருடத்திற்கு முன்பு கிடப்பில் போடப்பட்ட சிம்புவின் திரைப்படத்தை தூசி தட்டி கையில் எடுத்த விஜய் பட இயக்குனர்.! ரசிகர்கள் கொண்டாட்டம்

simbu
simbu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் மாநாடு  படம் 100வது நாளை எட்டியது அதனால் சிம்பு ரசிகர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு சிம்புவின் கைவசம் பல திரைப்படங்கள் இருந்து வருகிறது. அதோடு அடுத்தடுத்த திரைப்படங்களிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ஹாட்ஸ்டார் ott இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதலில் கமல் தொகுத்து வழங்கி வந்தார் அதன் பிறகு தற்போது சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் சிம்பு தொகுத்து வழங்குவதால் ரசிகர்கள் பலரும் நிகழ்ச்சியை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் ஏனென்றால் சிம்பு தனது பாணியில் அதிரடியாக போட்டியாளர்களை நேரடியாக கிழித்து தொங்க விடுகிறார். இந்த நிலையில் சிம்புவிற்கு நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்த பல திரைப்படங்கள் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிம்பு நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கைவிடப்பட்ட வேட்டை மன்னன் திரைப்படத்தை மீண்டும் திலீப்குமார் கையில் எடுக்க இருக்கிறார் இந்தத் திரைப்படம் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நெல்சன் திலிப்குமர் முதன்முதலில் வேட்டை மன்னன் திரைப்படத்தை இயக்கினார்.

ஆனால் பல சர்ச்சைகளை சந்தித்ததால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது இதனைத் தொடர்ந்து கோலமாவு கோகிலா டாக்டர் படங்களை கொடுத்தார். அதேபோல் நெல்சன் டிலிப்குமர் அடுத்ததாக ரஜினியின் 169 படத்தை பிரமாண்டமாக இயக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது அதுமட்டுமில்லாமல் இந்த படத்தையும் சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இந்த திரைப்படத்தை  முடித்துவிட்டு சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வந்த வேட்டை மன்னன் திரைப்படத்தை மீண்டும் கையில் எடுக்க இருக்கிறார் நெல்சன் டிலிப்குமர் எனவே சிம்பு ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

ஏனென்றால் வேட்டை மன்னன் திரைப்படம் கைவிடப்பட்டது சிம்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வறுத்ததை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த திரைப்படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருப்பதால் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

vettai mannan
vettai mannan