பாடல், கதாநாயகி இல்லாமல் உருவாகும் புதிய படத்தில் நடிக்கயுள்ள விஜய் – இயக்குனர் யார் தெரியுமா.?

vijay
vijay

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நெல்சன் உடன் கை கோர்த்தது பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ஷூட்டிங் முடிந்து இருந்தாலும் டப்பிங் மற்றும் போஸ்ட் பிரமோஷன் வேலைகளை நோக்கி நகர்ந்து உள்ளது படக்குழு.

இந்த படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அரபி குத்து பாடல்கள் வெளிவந்து மத்தியில் ட்ரெண்டிங் ஆக்கிய வருகிறது. இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து அபர்ண தாஸ், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் ஒரு வழியாக ஏப்ரல் 14 ஆம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து 66வது திரைப்படத்திற்காக தெலுங்கு பக்கம் அடி எடுத்து வைக்கிறார் அந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு.

தனது 67 வது திரைப்படத்துக்காக மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைய இருப்பதாக தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவலும் கிடைத்துள்ளது அதாவது லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கும் படத்தின் கதையில் நாயகி கிடையாதாம்.

மேலும் இந்த படத்தில் எந்த ஒரு பாடலும் இருக்காது என கூறப்படுகிறது அப்படி பார்த்தால் விஜய் 67 படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என தெரியவருகிறது. முதல் முறையாக கதாநாயகி மற்றும் பாடல் இல்லாமல் ஒரு புதிய படத்தில் நடிக்கிறது விஜய்க்கு இதுவே முதல்..