ரஜினியை அழிக்க கட்டம் கட்டும் விஜய்.. உண்மையை உடைத்து பேசிய பிரபலம்.! அட இப்படியெல்லாம் நடக்குமா

rajini and vijay
rajini and vijay

Rajini : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வரும் ரஜினி. கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சுமாராக ஓடின ஆனால் அவருடைய மார்க்கெட் குறைந்ததாக  பலரும் விமர்சித்தனர் மேலும் ரஜினியின் இடத்தை அடுத்த நடிகர்கள் பிடிக்கப் போவதாகவும் பேச்சுக்கள் இருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்க அடுத்து ஒரு தரமான படத்தை கொடுக்க வேண்டும் என பல இளம் இயக்குனர்களுடன் கதை கேட்டு வந்தார் ஆனால் நெல்சன் சொன்ன கதை சுவாரஸ்யமாக இருந்ததால் அந்த படத்திற்கு ஓகே சொன்னார்  ஜெயிலர் என்ற பெயரில் படம் அதிரடியாக உருவாகியுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அதற்கு முன்பாக படத்திலிருந்து வெளிவந்த அப்டேட்டுகளும் மாஸ் காட்டிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் சூப்பர் ஸ்டார் பட்டம் பிரச்சனை நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காக்கா, பறந்து என ஒரு குட்டி கதையை சொன்னார்.

ரஜினி விஜயை தான் காக்கா என  மறைமுகமாக கூறியுள்ளதாக நினைத்து ரஜினிக்கு எதிராக சோசியல் மீடியாக்களில் பேசி வருகின்றனர் ஒரு சிலர்  ரஜினியை விமர்சித்து பேனர்களும், போஸ்டர்களும் அடித்து வருகின்றனர்.  இந்த நிலையில் ஒரு பிரபலம் ரஜினி – விஜய் பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. விஜய் பணம் கொடுத்து ஒரு குரூப்பை வளர்த்து அதன் மூலம்தான் ரஜினிக்கு ஈடானவன்..

அவருக்கு அடுத்து நான் தான் சூப்பர் ஸ்டார் என கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு சினிமாவில் ஒரு அரசியல் செய்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க பார்க்கிறார் விஜய். அவரது படம் வெளியாகும் பொழுது மீடியாவில் ஒரு ஆளு தியேட்டர் ஓனர்களில் ஒரு ஆளு  விநியோஸ்தர்கள் மத்தியில் ஒரு ஆளு தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு ஆளு என வைத்துக்கொண்டு தான்..

படம் வசூலிக்கவே இல்லை என்றாலும் பாக்ஸ் ஆபிஸில் இவ்வளவு பெரிய கலெக்ஷன் என போட்டு முன்னேற்றி விடுகிறார்கள். அப்படி வளர்ந்து வந்த விஜய் உலக அளவில் புகழ்பெற்ற நடிகரான ரஜினியை வெல்ல முடியுமா அது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.