80, 90 கால கட்டங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமடைந்தவர் சரத்குமார் தற்பொழுது வயது முதிர்வு காரணமாக டாப் ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இப்போ விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளார்.
படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கு முன்பாக ரசிகர்களை சந்தோஷப்படுத்த வாரிசு படக்குழு தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வந்தது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல், தீ தளபதி ஜிமிக்கி பொண்ணு, ட்ரைலர், இசைய வெளியீட்டு விழா என ஒவ்வொன்றும் சூப்பராக இருந்தது.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் சூரியவம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே இதனை கூறினேன் என்று அவர் தெரிவித்தார். இதனை அறிந்த ரஜினி ரசிகர்கள் ரஜினியின் சாதனைகளைப் பட்டியலிட்டு அன்றும் இன்றும் என்றும் அவர் தான் சூப்பர் ஸ்டார் என பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென சரத்குமார் பேட்டி ஒன்றில் கூறியது.. நான் ரஜினி சார் சூப்பர் ஸ்டார் இல்லை என்று சொல்லவில்லை அஜித்குமார் சூப்பர் ஸ்டார் இல்லை என்று நான் சொல்லவில்லை விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று தான் சொன்னேன் ரசிகர்களை கவர்கின்ற எல்லா நடிகர்களும் சூப்பர் ஸ்டார் தான்.
அமிதாபச்சனும், ஷாருக்கானும் சூப்பர் ஸ்டார் தான் இவர் சூப்பர் ஸ்டார் இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் தான் என்று நான் சொல்லவில்லை வாழ்க்கையில் சாதிக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் என கூறினார். இந்த தகவலை தற்பொழுது அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.