தளபதி விஜய் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் இப்பொழுது தெலுங்கில் இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என பட குழு சொல்லி உள்ளதை அடுத்து மக்களும் ரசிகர்களும் பெரிய அளவில் இந்த படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த படத்தை முடித்துவிட்டு தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கும் லோகேஷ் உடன் விஜய் இரண்டாவது முறையாக கைகோர்த்து தளபதி 67வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது தளபதி விஜயை வைத்து நடிகரும் இயக்குனருமான சீமான் பகலவன் படத்தை இயக்க முடிவு செய்தனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளிவந்தது ஆனால் சில காரணங்களால் இந்த படம் திடீரென கைவிடப்பட்டது.
இது குறித்து சீமானிடம் சமீபத்தில் கேட்கப்பட்டதற்கு நான் விஜயை வைத்து பகலவன் படத்தை எடுக்க நினைத்தேன் ஆனால் அது முடியாமல் போனது, இனி அவரை வைத்து அந்த படத்தை எடுக்கப் போவதில்லை பகலவன் படத்தை நான் சிம்பு வைத்து எடுத்துக் கொள்கிறேன் என அதிரடியாக கூறியுள்ளார்.