தமிழ் சினிமாவில் இருக்கும் தூண்களாக இருப்பவர்கள் அஜித் விஜய் இவர்கள் இருவரும் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் இப்பொழுது நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 61-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இறுதி கட்டப்பட நடத்தப்பட்டு வருகிறது. அதே போல நடிகர் விஜயும் தற்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தின் மூன்றாவது கட்டப்படிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, ஜெயசுதா.
மற்றும் பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படி இருவரும் தொடர்ந்து சினிமா உலகில் வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் அஜித், விஜய் பற்றிய பேச்சு ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது இருவரும் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு வரமுறையை வகுத்துக் கொண்டு ஓடுகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித்குமார் நடிக்க ஆரம்பித்து விட்டால் நைட்டு 12 மணி 2 மணி என ஆகினாலும் அதை நடித்து முடித்துவிட்டு தான் செல்வார் ஆனால் நடிகர் விஜய் அப்படி கிடையாது.
அவர் காலையில் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் சாய்ந்திரம் 6 மணிக்குள் அனைத்து காட்சிகளையும் முடித்து விட வேண்டும் என்பதற்காக விறுவிறுப்பாக நடிப்பாராம் 6 மணிக்கு மேல் ஒரு நிமிடம் கூட அவர் ஷூட்டிங்கில் இருக்க மாட்டார் என கூறப்படுகிறது அது ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறாராம். இதனை வலைப்பேச்சு நண்பர்கள் தனது youtube சேனலில் பேசிக்கொண்டனர்.