அந்த விஷயத்தில் விஜய் தான் NO.1 – அஜித்தால் முடிவே முடியாது.?

ajith and vijay
ajith and vijay

தமிழ் சினிமா உலகில் புதிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர ரெடியாக இருக்கிறது ஆனால் மக்கள் கவனம் இரண்டு திரைப்படங்களை மட்டுமே பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் அந்த இரண்டு திரைப்படங்கள் வேறு எதுவும் அல்ல அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு திரைப்படத்தை தான்..

இந்த இரண்டு திரைப்படங்களுமே அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. அஜித்தின் துணிவு  படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் மூவி நிறுவனம் வெளியிடுகிறது இதனால் தற்போது அதற்கான வேலைகளில் தீவிரம் கேட்டு வருகிறது தமிழகத்தில் வாரிசு திரைப்படத்தை விட துணிவு திரைப்படம்..

100 திரையரங்குகள் அதிகமாக வெளியாகும் என சொல்லப்படுகிறது இப்படி இருந்தாலும் வசூல் என்று வந்துவிட்டால் விஜயின் கைதான் உயரும் என ஒரு கருத்து இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் – விஜய் படங்கள் குறித்து சில தகவல்களை கொடுத்துள்ளார்.

விஜய் படங்களின் வசூலில் 75 சதவீதம் கூட வசூலை அஜித் படம் பண்ணுவது இல்லை என கூறினார் மேலும் பேசிய அவர் அஜித் தமிழ்நாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் ஆனால் விஜய் தமிழைத் தாண்டி பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் அதனால் தான் அவரது படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன.

கடைசியாக அஜித் விஜய் நடித்த படங்களை வைத்து பார்த்தாலும் கூட வலிமை படத்தின் வசூலை விட பீஸ்ட் படத்தின் வசூல் அதிகம் ஆக இருந்தது.. விஜய் புதிய இயக்குனர்களுடன் கைகோர்த்து தொடர்ந்து கமர்சியல்  படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை உயர்த்தி உள்ளார் இதனால் வசூல் ரீதியாக விஜயின் கை தான் ஓங்கி இருக்கிறது என அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.