தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு நல்ல மார்க்கெட் வைத்திருப்பவர் தளபதி விஜய் இதனால் விஜய் வைத்து படம் பண்ண ஒவ்வொரு இயக்குனரும், தயாரிப்பாளரும் ரொம்ப ஆசைப்படுகின்றனர். வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் லோகேஷ் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே போதை பொருளை மையமாக வைத்து தான் படம் எடுக்கப்பட்டிருந்தது.
அதே மாதிரி தான் லியோ படமும் இருக்கப்போகிறதாம் இதனால் இந்த படத்திலும் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என சொல்லப்படுகிறது அதற்கு ஏற்றார் போல லியோ திரைப்படத்தில் தளபதி உடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து வருகின்றனர்
இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் யாருடன் கைகோர்க்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனரும், நடிகருமான சேரன் விஜய் பற்றி பேசியது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சேரன் இயக்கத்தில் உருவான ஆட்டோகிராப் திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது விஜய் தானாம்..
முதலில் இந்த கதையை விஜய்யிடம் சொல்லி இருக்கிறார் அவருக்கும் ரொம்ப பிடித்து போய் நடிக்கிறேன் என ஓகே சொன்னாராம் ஆனால் அந்த சமயத்தில் சேரன் தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் ஆட்டோகிராப் படம் தள்ளிப் போனது பிறகு விஜய் வைத்து எடுக்கலாம் என்று பார்த்தால் விஜய் வேற படங்களில் பிஸியாக இருந்ததால்..
ஆட்டோகிராப் திரைப்படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனதாம்.. இந்த கதையை முதலில் விஜயிடம் சொல்லும் போது சுமார் 3 மணி நேரம் உட்கார்ந்து அந்த கதையை கேட்டாராம் இடையில் எழுந்து செல்லுவது போன்ற எந்த விஷயத்தையும் விஜய் செய்யவில்லையாம் சிவாஜிக்கு பிறகு கதை கேட்பதில் விஜய் தான் பெஸ்ட் என சேரன் கூறியுள்ளார்.