துணிவை பார்த்து வாரிசுக்கு பயம் வந்துடுச்சா..? ஏத்தி விடும் ப்ளுசட்டை மாறன்…கொந்தளித்த ரசிகர்கள்

blue-sattai-maran
blue-sattai-maran

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் வசூல் மன்னனாகவும் இருக்கிறார் இவர் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவது  மட்டும் இல்லாமல் பல தயாரிப்பாளர்கல் இயக்குனர்கள் என பலரும் விஜய் வைத்து எப்போது படம் செய்யலாம் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் விஜயின் திரைப்படம் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக விஜய் உடன் இணைந்து  நடித்துள்ளதால் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பு திரைப்படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் இரண்டு திரைப்படமும் மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ரஜினியின் கபாலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்தார்கள் அதேபோல் விஜயின் வாரிசு திரைப்படத்திற்காக மெட்ரோ ரயிலில் போஸ்டர் எடுத்து மிகப் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜய் அடிக்கடி ரசிகர்களையும் சந்தித்து வருகிறார். சமீபத்தில் கூட விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து அவர்களை சந்தித்தார் அந்த வகையில் தற்பொழுது சென்னை பனையூர் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை  சந்திக்கிறார் விஜய் நிர்வாகிகளை சந்திப்பதற்காக மணக்க மணக்க மட்டன் பிரியாணி சுடச்சுட ரெடியாகி கொண்டிருக்கிறது அதேபோல் அடையாள அட்டை வைத்துள்ள நிர்வாகிகளுக்கு மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி எனவும் கூறியுள்ளார்கள்.

இந்த தகவலை அறிந்த ப்ளூ சட்டை மாறன் விஜய்யை சீண்டும் அளவிற்கு ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் அதில் துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில் இருக்கிறாரா விஜய் என கேள்வி எழுப்பி உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த பதிவிற்கு மீண்டும் பிரியாணி என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது அது மட்டும் இல்லாமல் புளு சட்டை மாறனை விஜய் ரசிகர்கள் வசைப்பாடி வருகிறார்கள். இதலாம் ஒரு பிழைப்பா என மாறனை  கிழித்து தொங்கவிடுகிறார்கள் ரசிகர்கள்