தமிழ் சினிமாவில் இரு தூண்களாக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தற்போது வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடுகின்றனர். இவர்களுடைய படங்கள் பெரிதும் விசேஷ நாட்களில் களம் இறங்குகின்றன அதனால் பல தடவை நேருக்கு நேர் மோதி உள்ளன ஆரம்பத்தில் விஜயின் கை ஓங்கி இருந்தாலும் சமீபகாலமாக அஜித் படங்கள் அமோக வெற்றியை பதிவு செய்கின்றன.
ஏன் கடந்த பொங்கலை முன்னிட்டு கூட அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின இதில் வசூல் ரீதியாக வாரிசு வெற்றி பெற்று இருந்தாலும், விமர்சன ரீதியாக மக்கள் மனதில் இடம் பிடித்தது என்னவோ துணிவு திரைப்படம் தான். இதனை தொடர்ந்து இரண்டு பேரும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் மற்றும் அஜித்துடன் பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகர் மாரிமுத்து அஜித், விஜய் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் அவர் சொன்னது.. விஜய், அஜித் ஆகிய இருவர்களுடன் ஆரம்ப காலகட்டத்தில் நான் பழகி இருக்கிறேன் அஜித் தனது மனதில் என்ன நினைக்கிறாரோ அதை நேரடியாகவே கொட்டி விடுவார்..
அவருக்கு எதையும் உள்ளே வைத்துக் கொள்ள தெரியாது ஆனால் விஜய் அப்படி இல்ல ஒருவர் மீது அவருக்கு கடும் கோபம் இருக்கும் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவருடன் சிரித்துக் பேசிக் கொண்டிருப்பார் அனைத்தையும் உள்ளே வைத்திருப்பார் முழுக்க முழுக்க மைன்ட் பிராசஸ் செய்து நான்கு, ஐந்து நாட்கள் பிறகு விஜய்க்கு யார் மீது கோபம் இருந்ததோ அவருக்கு வேறு வடிவத்தில் தண்டனை வந்து சேரும் என்றார்.
மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் நம்ம நண்பர் அஜித் என சொன்ன விஜய் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் அஜித் குறித்து எதுவுமே பேசவில்லை முக்கியமாக யார் நம்பர் ஒன் என்று தில் ராஜு ஆரம்பித்து வைத்த பிரச்சனையை விஜய் நினைத்திருந்தால் ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் முடித்து வைத்திருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை.. இதை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது. விஜய் உள்ளே ஒன்று வைத்து வெளியேவும் மற்றொன்று பேச கூடியவர் என சொல்லி பலரும் சொல்லி வருகின்றனர்.