தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக ஓடிக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பாசமாக கொடுத்தனர் இந்த இடத்திற்கு தான் தற்பொழுது பிரச்சனையே ஆம் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விஜய் ஆசைப்படுவதாக சமீபத்தில் பூதாகரமாக வெடித்தது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது காக்கா – பருந்து கதை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். தளபதி விஜய் நிச்சயம் தனது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு குட்டி கதையை சொல்லி பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆடியோ லான்ச் கென்சல் ஆகியுள்ளது. உடனே லியோ டீம் படத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டு உள்ளது. அதில் வரும் வசனங்கள் ரஜினிக்கு பதிலடி கொடுப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியுடன் மோத விஜயும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது ரஜினி கடைசியாக நடித்த ஜெயிலர் படம் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டதை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தனது 171 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகி உள்ளது. ரஜினியின் 170 படம் அடுத்த ஆண்டு சம்மர் ஸ்பெஷல் ஆக இறங்கும் என்றும், தலைவர் 171 படம் 2024 தீபாவளிக்கு ஸ்பெஷல் ஆக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்..
அதே தேதியில் தான் விஜயின் தளபதி 68 படத்தையும் ரிலீஸ் செய்ய பிளான் போட்டு உள்ளதாம் ஜெயிலர் தனியாக வந்து பெரிய வசூல் செய்து விட்டது. தலைவர் 171 உடன் தளபதி போட்டியிட்டு தனது தரப்பு பலத்தை காட்டி இருக்கிறாராம்? 2024 தீபாவளியில் யார் கை ஓங்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..