தளபதி 66ல் வேற லெவலில் இறங்கி அடிக்க போகும் விஜய்..! எதிர்பார்ப்பை எகிற வைத்த வம்சி..!

vijay
vijay

தமிழ் சினிமாவில் தற்போது தளபதி விஜய் முன்னணி நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கனவுக்கண்ணனாக திகழ்ந்து வருகிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என பலர் கூறினாலும் உண்மையில் அப்படி கிடையாது. மேலும் நடிகர் விஜய் தற்போது தன்னுடைய 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தினை தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் இயக்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் இதர கதாபாத்திரத்தில் சரத்குமார் பிரபு சங்கீதா பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்க உள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக இயக்குனர் தமன் அவர்கள் இசை அமைப்பது மட்டுமின்றி இந்த திரைபடத்தில் வேற லெவல் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட போவதாக கூறி உள்ளார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தளபதி 66 திரைப்படத்தில் விஜயின் லுக் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் திரண்டு வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் அதிக அளவு ஆக்ஷன் காட்சிகள் இந்த திரைப்படத்தில் இடம் பெறாது மேலும் சென்டிமென்ட் காட்சிகள் மட்டுமே அதிக அளவு இடம்பெறும் என இயக்குனர் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் இரண்டு வேடத்தில் நடிப்பது காரணமாக ஒரு வேடத்திற்கு ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிப்பது போல் மற்றொரு வேடத்திற்கு யார் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருப்பது மட்டுமில்லாமல் அந்த கதாநாயகி யாராக இருக்கும் என எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.