தமிழ் திரையுலகில் வசூல் மன்னர்களாகவும் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்களாகவும் வலம் வருபவர்கள் ரஜினி,அஜித்,விஜய்.
இவர்கள் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான நாளன்று திரையரங்கமே இவர்களது ரசிகர்கள் அலறவிட்டு விடுவார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.மேலும் ரஜினி,அஜித்,விஜய் அவர்கள் மூன்று பேருமே போட்டிப்போட்டு ஒருவர் வைத்த சாதனையை முறியடிப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படம் 50 ஆவது நாள் வரை 134 திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
அதேபோல் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் 50 ஆவது நாளில் 125 தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது இவர்கள் இரண்டு சாதனையையும் விஜய் தற்போது முறியடித்துள்ளார்.
ஆம் விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் 50 ஆவது நாளில் 156 தியேட்டர்களில் ஓடி ரஜினி அஜித் சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும் இந்த தகவல் தற்போது இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.