தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே மாஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் இணைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஜப்பானில் தமிழ் படங்களுக்கு அதிகம் மவுஸ் உண்டு குறிப்பாக அங்கு ரஜினி நடிக்கும் படங்கள் சக்கை போடு போடும். அது மட்டுமல்லாமல் அங்குள்ள ஏராளமான ரசிகர்கள் தமிழ் திரைப்பட ரசிகர்களும் உள்ளன.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கியுள்ள மாநகரம் கைதி மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஜயை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்கு உள்ளார் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முன்னணி இயக்குனராக உருவாக்கியது விஜயின் மாஸ்டர் திரைப்படம் தான் இப்படம் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி திரையரங்குகளில் வசலில் பட்டையை கிளப்பியது.
கொரோனா அச்சுறுத்துதல் இருந்ததால் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. மீண்டும் தியேட்டருக்கு வரவைத்து புத்துயிர் கொடுத்த திரைப்படம் மாஸ்டர் வசூலை வாரி குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது இந்த படம். மேலும் மாஸ்டர் திரைப்படத்திற்கு ஜப்பானில் சென் செய் என பெயரிடப்பட்டுள்ளனர். சென்செய் என்றால் ஜப்பானிய மொழியில் வாத்தி என்று அர்த்தம்.
ஜப்பானில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் நவம்பர் 18ஆம் தேதி அங்கு உள்ள திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்காக ஜப்பான் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் ஜப்பானில் ரிலீசான நிலையில் தற்போது மாஸ்டரும் வெளியாக உள்ளதை ரசிகர்களும் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.