விக்ரம் படத்தில் ரோலக்ஸ் சூர்யா.. LEO திரைப்படத்தில் யார் தெரியுமா.? எகிறும் எதிர்பார்ப்பு

LEO
LEO

லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்ப்பது வழக்கம் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை பல திருப்பங்களுடன் மிக மிகவும் விறுவிறுப்பாக பல டிரஸ்டுகளுடன் இருக்கும், அந்த வகையில் ஒரு படம் தான் விக்ரம் இந்த படத்தில் ரோலக்ஸ் என்ற சூர்யாவின் கேரக்டர் அறிமுகமான நிலையில் மிகவும் அதிர வைத்தது. எனவே லோயோ படத்திலும் ரோலக்ஸ் போன்ற ஒரு கேரக்டர் கிளைமாக்ஸ் காட்சியில் அறிமுகப்படுத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதமேனன், மிஷ்கின் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார் என்பது பலருக்கும் மகிழ்ச்சியை தருகிறது.

இவ்வாறு மல்டி ஸ்டார் படம் எனவும் கூறப்படுகிறது தற்பொழுது ராம்சரண் ரோலக்ஸ் போன்ற ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவருடைய காட்சிகள் படம் பிடிப்பிற்காக தற்பொழுது மீண்டும் காஷ்மீருக்கு படக்குழு சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இது மட்டும் உண்மை என்றால் லோகேஷின் லியோ படம் வேற லெவலில் மிகப்பெரிய சம்பவத்தை செய்யும் என்பது உறுதி.

ஆனால் தற்பொழுது இந்த ரகசியத்தை படக்குழு வெளியிட தயாராகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இவ்வாறு இந்த தகவலின்படி லியோ படம் லோகேஷின் LCU படம் என்பது தெரிய வந்துள்ளது.

லியோ படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் மிகப்பெரிய பொருட்ச அளவில் லலித் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட வருகிறது இந்த படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய சதீஷ்குமார் கலை இயக்கத்திலும் உருவாகி வருகிறது.