தற்போது விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு 70% முடிவடைந்த நிலையில் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் தீபாவளி அன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயின் வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட பட பிடிப்பை சென்னையில் உள்ள எண்ணூரில் நடைபெற்று வருகிறது இதை அறிந்த ரசிகர்களும் அங்கு கூட்டம் கூட்டமாக குவி ஆரம்பித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் ரசிகர்களை சந்திக்க ஷூட்டிங் முடிந்தவுடன் வெளியே வந்து கைகளை அசைத்து அனைவரையும் உற்சாகப்பட வைத்தார். இந்த நிலையில் வாரிசு படம் முடிந்த உடன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
மாஸ்டர் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணையுள்ளதால் ரசிகன் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதனைத் தொடர்ந்து தளபதி 67 திரைப்படம் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளதாகவும் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மட்டும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஆறு வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் அதில் சஞ்சய் தத், பிரித்திவிராஜ், மன்சூர் அலிகான் இவர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது கௌதம் மேனனும் தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் இதற்காக 47 நாட்கள் கால் சீட் கொடுத்து உள்ளாராம் இதையெல்லாம் விஜய்க்காக தான் என சொல்லப்படுகிறது.
கௌதமணன் தற்போது சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடுத்த படத்தை இயக்குவார் என்று எண்ணி இருந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க போகிறார்.