தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளிய வர காத்திருக்கிறது. இதே தினத்தில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த இரண்டு படங்களும் ஒரே தினத்தில் நேரடியாக மோதுகிறது. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களும் ஒரே நேரத்தில் நேரடியாக மோத உள்ளதால் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு படங்களில் எந்த படம் வெற்றி அடையும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருக்கிறார். ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நான்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் உள்ளடங்கியது.
இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யும் தற்போது இரண்டாவது முறையாக தளபதி 67 வது திரைப்படத்தின் மூலம் இணைகிறார்கள். தளபதி 67 திரைப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடத்தப்பட்ட நிலையில் படபிடிப்பு எப்போது தொடங்கும் என பல கேள்விகள் எழுப்பி வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் எங்கு சென்றாலும் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் சொல்லுங்கள் சார் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜயை வைத்து ஒரு படமாவது தயாரிக்க வேண்டும் என்று பிரபல முன்னணி நடிகர் ஒருவர் ஒற்றை காலை நிற்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆம் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படமாவது தயாரிக்க வேண்டும் என்று இருந்து வருகிறாராம். இதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடமும் கூறியிருக்கிறாராம்.
ஆனால் விஜய் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவர் எதற்காக மறுப்பு தெரிவித்தார் என்று எந்த ஒரு காரணமும் இன்னும் வெளி வரவில்லை. ஒருவேளை மற்ற நடிகரின் தயாரிப்பில் நான் நடிப்பதா என்று எண்ணி இருப்பார் என்று பிரபல ஊடகச் சேனலில் பேட்டியில் சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.