குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் தற்பொழுது பருவ வயதை அடைந்து ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மூலம் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்த ஒருவர் சின்னத்திரையில் ஒரு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களிடம் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அந்த வகையில் ரசிகர் ஒருவர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றால் யாருக்கு ஜோடியாக வேண்டும் என்பது உங்களுடைய ஆசை என்ன என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர் தளபதி விஜயின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று கூறி பெரும் சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜயின் மகனான சஞ்சய் படம் இயக்குவதற்கான பட்டப் படிப்பை படித்து முடித்துள்ளார்.
எனவே இவர் விரைவில் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகிறார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்திருந்த உப்பெண்ணா திரைப்படத்தில் சஞ்சய் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் விஜய் சேதுபதி இது முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளார். இதில் நடிக்கவில்லை என்றாலும் இன்னும் சில மாதங்களில் கண்டிப்பாக திரைப்படங்களில் நடிப்பதற்கு களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்தான் ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி குழந்தையாக ரவீனா தஹா சஞ்சய்க்கு ஜோடியாக நடிப்பது தான் எனது ஆசை என்று கூறியுள்ளார்.எனவே இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பிஞ்சிலேயே பழுத்து போச்சு 17 வயது நடிகை எனக் கூறி வருகிறார்கள்.