போடுடா வெடிய.. வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.! வெளிவந்த சூப்பர் அப்டேட்..

vijay-
vijay-

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய். இவர் இதுவரை நடித்த பெரும்பாலான படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன ஏன் இவர் கடைசியாக பீஸ்ட் படம் கூட வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றெறிந்த பொழுதிலும் வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல அள்ளி சாதனை படைத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம்  ஆக்சன், சென்டிமென்ட் மற்றும் காமெடி கலந்த ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார் தில் ராஜு மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறார்.

வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் பல முன்னணி நடிகர் , நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போன்ற போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி உள்ளது.

அதன் பிறகு ஒரு அப்டேட்டையும் கொடுக்காமல் படத்தின் சூட்டிங் முடிக்க தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் எண்ணூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அண்மையில் கூட தளபதி விஜய் ஷூட்டிங் ஸ்பாடடில் ரசிகர்களை சந்தித்து கைகாட்டிய புகைப்படம் பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் எப்பொழுது வெளிவரும் என பலரும் எதிர்நோக்கி இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது விஜயின் 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அதிரடியாக கூறியுள்ளது இந்த செய்தி தற்போது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.