தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சரத்குமார், பிரகாஷ்ராஜ் சாமியப்பா, யோகி பாபு, சங்கீதா என பலர் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி தான் இயக்கி வருகிறார்.
படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது அதனால் பல நடிகர் மற்றும் நடிகைகள் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்தித்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வளைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த புகைப்படத்தில் விஜய் இளமையான தோற்றத்துடன் இருந்தார் அதனால் தளபதி 66 திரைப்படத்தில் விஜய்யின் கெட்டப் இதுதான் என பலரும் கூறி வந்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தில் இணைந்துள்ள பிரகாஷ்ராஜ் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தளபதி 66 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் தற்பொழுது பிரகாஷ்ராஜ் தளபதி 66 படப்பிடிப்பில் விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் விஜய் சற்று வயதான கெட்டப்பில் மாறுபட்ட ஹேர் ஸ்டைலில் இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார் என்று யூகித்து உள்ளார்கள்.
இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.