தளபதி விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகர் ஆவார், இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே போகிறது.
கொரோனாவால் இந்தியாவும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது, உலக அளவில் பாதிப்பில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துவிட்டது, இந்த பாதிப்பிலிருந்து நம்மலை பாதுகாத்துக்கொள்ள தனிமைப் படுத்திக் கொள்வதும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் இது தான் சிறந்த வழி என பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறது. அதே போல் பல பிரபலங்களும் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள், அப்படி தான் கேரளாவில் விழிப்புணர்வு போஸ்டரை ஒட்டி உள்ளார்கள் அதில் விஜய்யின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
இந்த போஸ்டரை பார்த்த தளபதி ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்..