தல அஜித்தின் பாணியை பின்பற்றும் விஜய் ஏன் தெரியுமா.? விவரம் இதோ.!

ajith-and-vijay
ajith-and-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருவார்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் தமிழ் சினிமாவையும் தாண்டி உலக அளவில் அதிகப்படியான ரசிகர்களை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் இருவரும் தனக்கென ஒரு புதிய பாணியை பின்பற்றி அதில் பயணித்து வருகின்றனர்.

தல அஜித் அவர்கள் சமூக அக்கறை கொண்ட நபராக இருந்து வருகிறார் இருப்பினும் அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் அதனை மறைமுகமாக செய்து வருகிறார் என்றே கூறவேண்டும் உதவி செய்வதாக இருந்தாலும் சமூகப் பிரச்சனையாக இருந்தாலும் அதில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் மறைமுகமாக செய்து வருகிறார் அஜித் இதிலிருந்து மாறுபட்டுவர் தான் தளபதிவிஜய் எந்த ஒரு சமூக பிரச்சனையாக இருந்தாலும் , உதவி செய்வதாக இருந்தாலும் அதனை நேரடியாக செய்து முடிப்பவர் தளபதி விஜய்.

தளபதி விஜய் அவர்கள் சமீபகாலமாக மேடைப் பேச்சுகளில் அரசியல் மறைமுகமாக வருவதன் மூலம் பல பிரச்சினைகள் எழுகின்றன மேலும் இவரது படங்களில் அரசியல் பேச்சுக்கள் திணிக்கப்பட்டு வருவதால் மேலும் பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து என்றார் தளபதி விஜய் மேலும் அவரது படங்களும்.

தல அஜித் ஒரு முறை அரசியல் மேடைப் பேச்சால் பல பிரச்சினைகளை சந்தித்த பிறகு மீடியாக்களை சந்தித்து முற்றிலும் தவிர்த்து வருகிறார் தற்போது விஜய் அவர்களும் அதனையே பின்பற்ற உள்ளார்  ஏனென்றால் சமீபகாலமாக ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போது தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமப்படுவதாக இதனையடுத்து இனி மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பது இல்லை என தற்போது முடிவெடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சமூக கருத்துகளை பேசி யாரையும் இனி பகைத்துக் கொள்ளப் போவதில்லை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது இதனையடுத்து அவர் தற்பொழுது அஜித் பாணியை பின்பற்றினால் எந்த ஒரு பாதிப்பும் வராது என என்பதால்  அதனையே தற்போது விஜய் அவர்களும் பின்பற்ற உள்ளார்.அதில் அஜித் அவர்கள் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கூறியது போல தற்போது விஜய் அவர்களும் எந்தவித கொண்டாட்டம் வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.