தளபதி விஜய் அண்மைகாலமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன. இதுவரை அட்லி, லோகேஷ் ஆகியவர்களை தொடர்ந்து இப்போது இளம் இயக்குனர் நெல்சன் உடன் கை கோர்த்தது விஜய் தனது 65வது திரைப்படமாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ஏப்ரல் 13ம் தேதி கோலாகலமாக உலக அளவில் வெளியாகியது படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார் இருப்பினும் இந்த படம் முழுக்க முழுக்க தமிழ் படமாக உருவாகிறதாம் இதை விஜயை அண்மையில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
இது விஜய்க்கு 66 வது திரைப்படமாக அமைந்துள்ளது இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார். மிக பிரமாண்ட முறையில் தயாரிப்பாளர் தில் ராஜு எடுத்து வருகிறார். இந்த படத்தில் விஜய் உடன் கை கோர்த்தது ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திரைப்படத்திற்காக தளபதி விஜய் சுமார் 120 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்யின் தந்தையும், இயக்குனரும் , நடிகருமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா ஆரம்பத்தில் நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து கூறி உள்ளார்.
அவர் சொன்னது விஜய் முதலில் வெற்றி படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக அப்பொழுது அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது 500 ரூபாய் அப்பொழுது ஒரு குழந்தை நட்சத்திரம் 500 ரூபாய் சம்பளம் வாங்குவது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல எனவும் தெரிவித்தார் அந்த 500 ரூபாய் சம்பளத்தை விஜய்க்கு கொடுத்து தயாரிப்பாளரும், நடிகருமான பி எஸ் வீரப்பா எனவும் கூறினார்.