விஜய் தலையில் இடி வருமான வரித்துறை அதிரடி.!

vijay

விஜய்தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அதிர்ச்சியான தகவல் நடைபெற்றது என்று சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அந்த தகவல் என்னவென்றால் பத்து மாதங்களுக்கு பிறகு பிகில் திரைப்படத்தை பற்றி  ரெய்டு குறித்து வருமான வரி துறையினர் புலனாய்வு விசாரணையின் பிரிவு இறுதி அறிக்கையை தயார் செய்துள்ளனர்கலாம்.

மேலும் மாஸ்டர் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலி என்.எல்.சி.யில் நடைபெற்று வந்தது அங்கு விஜய் படம் நடித்துக் கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு தளத்திற்கு நுழைந்த வருமான வரி துறையினர் விஜயிடம் பல கேள்விகளை கேட்டதை மட்டுமல்லாமல் அவர்களது காரிலேயே விஜயை சென்னைக்கு அழைத்து வந்தார்கள்.

vijay
vijay

சென்னையில் பனையூர் இல்லத்திற்கு விஜய்யை வருமான வரி துறையினர் அழைத்து வந்தனர். அதற்கு முன்பே அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் ஏ.ஜி.எஸ் சினிமாஸ் அலுவலகம் மற்றும் பைனான்சியர் அன்புச்செல்வனின் வீடு உட்பட பிகில் திரைப்படத்தில் முக்கியமான நபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து பைனான்சியர் அன்புச்செல்வன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய போது கணக்கில் வராத ரூ. 77 கோடி பறிமுதல் வருவாய்த்துறையினர் கைப்பற்றினர் அதோடு ஏராளமான வரவு, செலவு முதலீடு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

அப்போது வருமான வரி துறையினர் அறிக்கை வெளியிட்ட போது விஜய் பிகில் திரைப்படத்தில் 50 லட்சம் ஊதியம் பெற்று உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 150 கோடியில் உருவாக்கப்பட்ட பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்ததை கண்டுபிடித்து விட்டார்கள் மேலும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கை மேற்கொண்டபோது 35 பேரின் வாக்குமூலம் மற்றும் 1200 பக்க ஆதாரங்களையும் வருமான வரி துறையினர் கைப்பற்றினார்கள் என தகவல் வெளிவந்துள்ளது.

10 மாதங்களுக்கு பிறகு பிகில் திரைப்படம் தொடர்பாக ரெய்டு நடத்திய வருவாய் வரி துறையினர் இறுதி அறிக்கையை தயார் செய்து விட்டனர் என கூறப்படுகிறது எந்த நேரத்திலும் கூட இதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க படலாம் என தெரியவந்துள்ளது.