தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார், இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரைக்கு வர வேண்டியதுதான் ஆனால் கொரோனா சூழ்நிலை காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே போனது.
மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமத்துள்ளார். படத்தை எக்ஸ்பி கிரியஷேன் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளது.
மேலும் படத்தில் சாந்தனு பாக்கியராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா கௌரி கிஷன், ஸ்ரீமன், சஞ்சீவ் ஸ்ரீநாத், பிரேம், பெருமாள் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் மாஸ்டர் திரைப்படத்திற்கு அடுத்ததாக விஜய் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களிடம் இருந்து வருகிறது.
மேலும் விஜய்யின் அடுத்த திரைபடத்தை கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் மூலம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க போகிறாராம், ஏற்கனவே இந்தத் திரைப்படத்திற்காக தொடங்கப்பட்ட pre-production வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படி இருக்க விஜயை வைத்து வரலாற்று திரைப் படத்தை இயக்கப்போவதாக அதிரடியாக கூறியுள்ளார் இயக்குனருமான நடிகருமான சசிகுமார். சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்த அதனைத்தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், கிடாரி நாடோடிகள் 2 என பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் சசிகுமார் பேசும் போது வரலாற்று கதை உள்ள திரைப்படத்தில் நடிக்க ஆசை இல்லை ஆனால் அப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, மேலும் வரலாற்று கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன் அந்த கதையை தளபதி விஜய்க்கு தான் பொருத்தமாக இருக்கும், அதனால் கதையை விஜய்யிடம் கூறினேன் விஜய்யும் ஓகே சொன்னார் ஆனால் வேறு சில காரணங்களால் பட பிடிப்பு நடைபெறவில்லை படத்திற்கான பட்ஜெட் அதிகமாக இருந்தது வருங்காலத்தில் கண்டிப்பாக அந்த திரைப்படத்தை விஜய் நானும் சேர்ந்து செய்வோம் என நம்பிக்கையை கூறியுள்ளார்.