தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிர்வாண நிதியாக 1.30 கோடியை நிவாரண நிதியாக வழங்கி உள்ளார் இதனை தொடர்ந்து வறுமையில் வாடுபவர்களுக்கு வங்கிக்கணக்கில் பணத்தை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் 144 தடை விதிக்கப்பட்ட நாடு முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறார்கள், இந்த தடையால் மக்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள், அதனால் அவர்களின் வாழ்வாதார மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் தொழிலாளர்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் தினக்கூலி தொழிலாளர்களும் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் இப்படி வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு 1.30 கோடி நிதி உதவி செய்தார். இதனையடுத்து தனது மன்றம் மூலம் தொடர்ச்சியாக உதவிகளை வாரி வழங்கி வருகிறார், கொரோனா தடுப்பில் பாதிக்கப்பட்ட தன்னுடைய ரசிகர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பி வைத்துள்ளார்.
யார் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை அவருடைய மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் ஏற்கனவே விஜய் கணக்கெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது, அப்படி மத்திய சென்னை விஜய் நற்பணி மன்ற தலைவர் பூக்கடை குமாரிடம் அவருடைய ஏரியாவில் கஷ்டப்படும் ரசிகர்கள் லிஸ்டை எடுத்துக் கொடுத்துள்ளார், மோகன் என்ற இளைஞர் மிகவும் கஷ்டப்படுவதாகவும் அவருடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை விஜய்க்கு அனுப்பியுள்ளார்கள் மோகனின் கணக்கிற்கு விஜய் அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது.
அதுமட்டுமில்லாமல் மேலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாப்பாடு அத்யாவசிய பொருள்களை தனது மக்கள் மன்றம் மூலமாகவே வழங்க ஏற்பாடு செய்துள்ளார் மேலும் யாரும் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் என்றும் மாநில தலைவர்கள் மூலமாக என்ன செலவு என்று கூறினால் அதனை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கிறேன் என வாக்குறுதி கொடுத்துள்ளாராம் விஜய்.