பாசிட்டிவ் விமர்சனத்திற்காக ஒரு கோடி செலவு செய்துள்ள விஜய்.! கிழித்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..

varisu
varisu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் தற்பொழுது வாரிசு திரைப்படம் உருவாகி இருக்கிறது இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் டிரைலர், போஸ்டர்கள் போன்றவை வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் வெளியாகும் அன்று அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் தொடர்ந்து எந்த திரைப்படம் பெஸ்ட் என சோசியல் மீடியாவில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார் அதோட மட்டுமல்லாமல் இந்த திரைப்படங்கள் வெளியாகுவதற்கு முன்பே வசூல் வேட்டை நடத்த ஆரம்பித்து விட்டது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படங்களுக்கான டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் வெளியாகும் அனைத்து படங்களை பற்றியும் யூடியூப் சேனலில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் முக்கியமான பிரபலம் தான் புளு சட்டை மாறன் எந்த திரைப்படம் வெளிவந்தாலும் சரமாரியாக விமர்சனம் செய்து வருபவர் தான் புளு சட்டை மாறன்.

பெரும்பாலும் ஏராளமான நல்ல திரைப்படங்களைக் கூட படுமோசமான வார்த்தைகள் விமர்சனம் செய்து வருகிறார். எனவே கடுப்பான ஏராளமான பிரபலங்கள் காசு சம்பாதிப்பதற்காக இவ்வாறு குறை சொல்வது சரி இல்லை என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தினை பாசிட்டிவ் விமர்சனத்தை தர வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளதாக இணையதளத்தில் செய்திகள் பரவி வருகிறது.

அதில் விஜய்யின் ரசிகர் ஒருவர் பிரபல இணையதள போட்ட செய்தி பதிவினை பகிர்ந்திருக்கிறார் அதனை புளு சட்டை மாறனும் பகிர்ந்துள்ள நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கோபத்தினை ஏற்படுத்தி உள்ளது. எனவே விஜய்யின் ரசிகர்கள் கமெண்ட் மூலம் புளூ சட்டை மாறனை கழுவி ஊற்றி வருகிறார்கள்.