சூப்பரான கதையை நழுவ விட்ட விஜய்.. கடைசி நேரத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய நடிகர்.! படம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்.!

vijay-
vijay-

நடிகர் விஜய் தமிழ் சினிமா உலகில் அதிக வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இப்பொழுது கூட தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என தளபதி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதற்கு காரணமும் இருக்கிறது விஜய் எப்பொழுதும் கதையை முழுமையாக கேட்டு பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பார் அந்த வகையில் நிச்சயம் வாரிசு திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா உலகில் தன்னை நம்பி வருகின்ற கதைகளை சிறப்பாக தேர்ந்தெடுத்த நடித்தாலும் ஒரு சில கதைகளை தவற விட்டுள்ளார்.

அந்த வகையில் விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சண்டக்கோழி இந்த படத்தை லிங்குசாமி ஒரு ஆக்ஷன் கலந்த திரைப்படமாக எடுத்திருப்பார். சண்டக்கோழி படத்தில் விஷாலுடன் கைகொடுத்து மீராஜஸ்மின், ராஜ்கிரண், மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தி இருந்தனர் இந்த படம் வெறும் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

ஆனால் படம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 30 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது ஆனால் உண்மையில் சண்டக்கோழி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான். இயக்குனர் லிங்கு சாமி படத்தின் கதையை முழுவதுமாக எழுதிவிட்டு தளபதி விஜய்யை சந்தித்து கதையைக் கூறி உள்ளார்.

vishal
vishal

அந்த சமயத்தில் தளபதி விஜய் தொடர்ந்து திருப்பாச்சி, சிவகாசி,  சச்சின் உள்பட பல்வேறு ஆக்சன் திரைப்படங்களில் நடித்து இருந்ததால் சண்டக்கோழி படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் தவற விட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும் இதற்கு முன்பு காதல் படங்களை நடித்து வெற்றி கண்ட வந்த இவர் சண்டக்கோழி படம் மூலமாகத் தான் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறினார் என்பது குறிப்பிடதக்கது.