தளபதி விஜய் தனது 66 வது திரைப்படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி தனக்கே உரிய ஸ்டைலில் எடுத்திருக்கிறார். தில் ராஜூ மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை தயாரித்திருக்கிறார். வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலை தினத்தை முன்னிட்டு கோலாகலமாக வெளியாகிறது.
இந்த படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு திரைப்படம் களம் இறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வசூலில் துணிவு படத்தை முந்த வாரிசு படக்குழு அடுத்தடுத்த முடிவுகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சரிக்கு சமமான திரையரங்குகள் வாரிசு மற்றும் துணிவுக்கு கிடைத்தாலும் தெலுங்கில் விஜய்க்கு ஒரு பெரிய மார்க்கெட் இருக்கிறது.
அங்கு தனது படத்தை ரிலீஸ் செய்தால் ஈசியாக துணிவு படத்தை ஓவர்க்டேக் செய்யலாம் என நினைத்தது ஆனால் தெலுங்கு திரை உலகில் வாரிசு படம் வெளியாவதற்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது. இருப்பினும் இந்த படத்தை ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் எடுத்து உள்ளதால் பிரச்சனைகளை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து வருகிறார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து ஆவேசமாக தனது கருத்தை பகிர்ந்து உள்ளார். விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் மரியாதை இருக்கிறது எதற்காக அவர் தேவையில்லாமல் தெலுங்கு நடிகர்களுடன் போட்டி போட வேண்டும் இதன் மூலம் அவர் தன்னுடைய மரியாதையை குறைத்துக் கொள்கிறார்.
தெலுங்கு ஹீரோக்கள் அங்கிருக்கும் தயாரிப்பாளர்களை நல்ல முறையில் தான் கவனித்துக் கொள்கிறார்கள் அதேபோன்று தமிழ் தயாரிப்பாளர்களிடம் நீங்கள் நடந்து கொள்கிறீர்களா தமிழ்நாட்டில் படப்பிடிப்பை நடத்தாமல் ஆந்திராவில் சென்று நடத்துகிறீர்கள் இதனால் இங்குள்ள சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதற்கும் மேலாக இப்பொழுது நேரடியாக தெலுங்கு படங்களுக்கு போட்டியாக உங்கள் படங்களையும் இறக்கி அவர்களது பணத்திலும் பங்கு கூட பார்க்கிறீர்கள் என்று கோபமாக பேசியிருந்தார்.
மேலும் விஜயின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் 25 சதவீதம் தான் வெளியாக இருக்கிறது. இதனால் அங்கு பிரச்சனை செய்யாமல் தமிழ்நாட்டில் வசூலை எப்படி அதிகப்படுத்துவது என்பதை மட்டும் கவனியுங்கள் ஏனென்றால் தமிழ்நாட்டில் அஜித், விஜய் இருவருக்குமே சமமான இடம் இருக்கிறது இவர்கள் இருவரையும் இங்கு யாரும் அசைக்க முடியாது.
அப்படி இருக்கும் போது நீங்கள் ஏன் தெலுங்கு ஹீரோக்களுடன் போட்டி போட வேண்டும் என்று வாரிசு ரிலீஸ் குறித்து நன்றாக பிடித்து வாங்கினார். தொடர்ந்து பேசிய அவர் அங்கு உங்கள் படங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தமிழ் திரை உலகம் பொறுப்பல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.