தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். இப்படத்தை கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தற்போது ரிலீஸ் ஆகாமல் இருந்தாலும் இப்படத்தின் எதிர்பார்ப்பது குறையாமல் இருந்து வருகிறது.
இப்படம் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளிவரும் என தெரிய வருகிறது இது ஒருபக்கம் இருந்தாலும் அடுத்த படத்தை குறித்து ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் இத்திரைப்படத்தை ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளதாக தெரியவருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி அனறு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இப்படத்தின் பட்ஜெட் 130கோடி உறுதியாகியுளளது.இப்படத்திற்காக தளபதி விஜய் அவர்கள் 70 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது முருகதாஸுக்கு 10 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் தளபதி விஜய் அவர்கள் மாஸ்டர் படத்திற்காக 80 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக 10 கோடியை குறைத்துக் கொண்டுள்ளார்.அதுபோல தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான முருகதாஸ் அவர்களும் 30 கோடியை சம்பளமாக கேட்ட நிலையில் அவருக்கு 10 கோடி கொடுக்க முன்வந்துள்ளது கூறப்படுகிறது.