தமிழ் சினிமா உலகில் தனது திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு திரைப்படத்தையும் தனது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமையும் படி யோசித்து வருபவர் தான் இளைய தளபதி விஜய் இவரது திரைப்படங்கள் என்றாலே வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து விடும் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து தளபதி 65 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பார்க்கும்பொழுது ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட்டாகும் என கூறி வந்தார்கள்.
இந்நிலையில் விஜய்யின் சொத்து மதிப்பு பற்றி ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது அதில் விஜயிடம் பல கோடி மதிப்புள்ள கார்கள் இருக்கிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யிடம் 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார் உள்ளதாம்.
அதுமட்டுமல்லாமல் 1.30 கோடி மதிப்புள்ள ஆடி A8, மற்றும்75 லட்சம் மதிப்புள்ள BMW series 5, மற்றும் 90லட்சம் மதிப்புள்ள BMW X6, 35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட பல விதமான கார்கள் அவரிடம் இருக்கிறதாம் அது போக அவரிடம் பலவிதமான சைக்கிள்கள் மற்றும் விலை உயர்ந்த பைக்குகளும் இருக்கிறது என இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் விஜய்யின் ஆண்டு வருமானம் சுமார் 100 கோடிக்கும் மேல் இருக்கிறது என கடந்த 2019ஆம் ஆண்டு கணக்கிடப்பட்டுள்ளதாம் மேலும் விஜய்க்கு சென்னையில் சாலி கிராமம், நீலாங்கரை, பனையூர் போன்ற இடங்களில் சொகுசு பங்களாக்கள் இருக்கிறது எனவும் தகவல் வெளியாகி உள்ளது இதனைத் தொடர்ந்து விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு 56 மில்லியன் டாலர்கள் எனவும் இந்திய அளவில் அது சுமார் 410 கோடியாகுமாம்.