விஜய்க்கு ஈகோ அதிகம்.? அதுக்குன்னு இப்படியா பண்றது.. உண்மையை போட்டு உடைத்த பிரபல பத்திரிகையாளர்

vijay
vijay

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்பொழுது இளம் இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 67வது திரைப்படமான லியோ படத்தின் நடித்து வருகிறார் இந்த படம் பக்கம் ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது படத்தின் இரண்டு கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த..

நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் சைலண்டாக நடைபெற்று வருகிறது.  இதனை தொடர்ந்து ஹச், வினோத், அட்லீ போன்ற இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து படம் பண்ணவும்  திட்டமிட்டு இருக்கிறாராம் இப்படி திரை உலகில் பிஸியான நடிகராக ஓடும் விஜய் பற்றி பழைய மற்றும் புதிய தகவல்கள் இணையதள பக்கத்தில் உலா வருவது வழக்கம் அப்படி பிரபல பத்திரிக்கையாளர் டிவி சோமு.

விஜய் பற்றி பேசியது பெரும் வைரலாகி வருகிறது விஜய் பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றால் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு மீதி நேரங்களில் கேரவனில் அமைதியாக போய் உட்கார்ந்திருப்பார் என்று பலரும் சொல்லி இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் டிவி சோமு சொன்னது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

அதாவது..  சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உதவி இயக்குனர் விஜயை வைத்து படம் இயக்குவதற்காக அவரிடம் ஒரு கதையை கூறி இருக்கிறார் அந்த கதையில் இன்னொரு நடிகர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம்.. அந்த கதாபாத்திரம் ஹீரோவின் கதாபாத்திரத்தை ஓவர் டேக் செய்வது போன்று ஒரு நினைவு விஜய்க்கு வந்தாம்  ஆதலால் அந்த இயக்குனரிடம் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை கொஞ்சம் குறைக்க சொல்லி இருக்கிறார் விஜய்.

அதன்படி அந்த இயக்குனரும் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டு மீண்டும் விஜயிடம் சென்று கதை சொல்லி இருக்கிறார்.  ஆனால் அப்படியும் அந்த கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக விஜய் நினைத்தாராம் அதன் பின் அந்த இயக்குனரை விஜய் சந்திக்கவே இல்லையாம்.. இவ்வாறு விஜய்க்கு ஈகோ அதிகம் என அந்த பேட்டியில் டிவி சோமு கூறி இருந்தார்