தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த பீஸ்ட், வாரிசு போன்ற படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த போதிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன அதனை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் இரண்டு கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட சூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடக்கும் என தகவல் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து பெரியவருமே என தகவல்கள் தெரிவிக்கின்றன. தளபதி விஜய் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்வது வழக்கம் அந்த வகையில் தனது 68வது படத்தின் இயக்குனரை தேர்வு செய்துள்ளார். தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என கூறப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு கடைசியாக எடுத்த கஸ்டடி படம் சுமாரான படமாக அமைந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தில் விஜய் நடிப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. வெங்கட் பிரபு விஜய்யை 10 மாசத்திற்கு முன்பே சந்தித்து ஒரு கதையை கூறினாராம் அந்த கதை விஜய்க்கு ரொம்ப பிடித்து போனாதாக ஓகே சொல்லி உள்ளார் என கூறப்படுகிறது விஜய்க்கு ஒரு கதை பிடித்து விட்டால் அந்த இயக்குனரின் முந்தைய படங்கள் எப்படி இருந்தது
என்பதை எல்லாம் பார்க்கவே மாட்டார் அவருடைய படத்தில் நடித்தே தீருவார் அப்படித்தான் ஏ. எல். விஜய் விக்ரமை வைத்து தாண்டவம் என்னும் படத்தை எடுத்தார் அந்த படம் தோல்வி படமாக அமைந்தாலும் அவருடைய அடுத்த படமான தலைவா படத்தில் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதனால் வெங்கட் பிரபு படத்தில் விஜய் நடிப்பது உறுதி என கூறுகின்றனர்.