அஜித்தை போல் விஜய் வைத்துள்ள சொகுசு கார்..! லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே மச்சி..

Vijay has 5 luxury cars: வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியினால் தற்பொழுது தென் இந்திய சினிமாவில் கலக்கி வரும் முன்னணி நடிகர் தான் விஜய். 90 காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து நடித்து வந்த விஜய் வருகின்ற 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். எனவே விரைவில் சினிமாவை விட்டு விலக இருக்கும் நிலையில் இவர் குறித்த ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதன்படி விஜய் கார் மீது அதிக ஆர்வம் கொண்டவர் அப்படி 90 காலகட்டத்தில் தான் நடிக்க வந்த புதிதில் டாட்டா கம்பெனி தயாரிப்பான டாட்டா எஸ்டேட் கார் மட்டுமே வைத்திருந்தார். இந்த காரை 3 இலட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கொஞ்சம் சினிமாவில் வளர்ந்த பிறகு 5 லட்சம் மதிப்புள்ள டாட்டா கம்பெனியின் பிரீமியம் காரை வாங்கியுள்ளார்.

இவ்வாறு படிப்படியாக உயர்ந்து அசைக்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் விஜய் தற்பொழுது விலை உயர்ந்த ஐந்து சொகுசு கார்களை வைத்துள்ளாராம் அந்த கார்கள் குறித்து பார்க்கலாம்.

மினி கூப்பர்: விஜய்க்கு மிகவும் பிடித்த கார் தான் மினி கூப்பர். பெரும்பாலும் இதில் தனியாக செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் நீலாங்கரை பகுதியில் சுற்றிவர பயன்படுத்தி வரும் மினி கூப்பர் காரின் விலை சுமார் 45 லட்சம் என கூறப்படுகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ் 6: இந்த கார் சுமார் 70 லட்சம் முதல் 82 லட்சம் வரை இருக்குமாம் விஜய் தனது மனைவிக்காக இந்த காரை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆடி A8: கோடியில் சம்பளம் வாங்கிய தொடங்கிய பொழுது விஜய் வாங்கிய கார் தான் ஆடி A8. இந்த காரை ஏராளமான நடிகர்கள் மட்டுமல்லாமல் விராட் கோலி, மகேந்திரா சிங் தோனி போன்ற பல கிரிக்கெட் வீரர்களும் வைத்துள்ளனர்

டொயோட்டா இன்னோவா: நடிகர் விஜய் சமீப காலங்களாக அரசியல் சார்ந்த விஷயங்களுக்காக இந்த காரை பயன்படுத்தி வருகிறார். மேலும் பல விழாக்களுக்கும் இந்த காரில் தான் செல்கிறார் இந்த காரின் விலை 40 லட்சமாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்: கோஸ்ட் வேரியண்ட் என்று சொல்லப்படும் டாப் கிளாஸ் மாடலான இந்தக் காரின் விலை சுமார் ஒன்பது கோடி இருக்குமாம். விஜய் தற்போது இந்த காரை விற்க முடிவில் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் 60 லட்சம் மதிப்பிலான பென்ஸ் கார் ஒன்றியம் உள்ளதாம்.

Exit mobile version