பல வருடங்களுக்கு முன்பே சச்சின் திரைப்படத்திற்காக நடிகையுடன் நெருக்கமாக போட்டோ ஷூட் நடத்திய விஜய்.!!இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!!

vijay 01

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.இப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் தற்பொழுது தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். பொதுவாக சினிமாவில் பிரபலமடைந்த திரையுலகினர் தங்களது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி பிரபலமடைய செய்துவிடுவார்கள்.

அந்த வகையில் அறிமுகமானவர் தான் நடிகர் விஜய்.இவர் தனது அப்பாவான  சந்திரசேகர் மூலம் நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானார். விஜயின் மீது பல விமர்சனங்கள் எழுந்து இருந்தாலும் விஜய் தன்னம்பிக்கையுடன் தனது விடாமுயற்சியினால் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சச்சின்.இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். இப்படத்தை மகேந்திரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் காமெடிக்கு வைகைப்புயல் வடிவேலு மிகவும் சிறப்பாக தனது காமெடி திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிபாஷா பாசு என்பவர் தான் நடிக்க இருந்தாராம் பிறகு சில பிரச்சனையினால் ஜெனிலியா நடித்தாராம்.

vijay 001
vijay 001

அந்த வகையில் சச்சின் திரைப்படத்திற்காக விஜய் முதலில் கமிட் ஆகியிருந்த பிபாஷா பாசுவுடன் விளம்பரத்திற்காக மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.