சீரியல் நடிகையின் கையை பிடித்து கொண்டு ஓடிய தளபதி விஜய்.? படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யம்.

vijay-
vijay-

தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சுருதி ராஜ். இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து வருகிறார் நடிகை சுருதி ராஜ் இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளதுரசிகர்கள் தொடர்ந்து இது சம்பந்தமாக கேள்வி கேட்டு வந்தாலும் அதற்கான சரியான பதில் சொல்லாமலேயே இருந்து வருகிறார் .

ரசிகர்களும் அந்தக் கேள்வியைக் கேட்பதையே விட்டு விட்டனர். இவர் சின்னத்திரை சீரியல் களை தாண்டி வெள்ளித்திரையில் பல்வேறு படங்களில் குணச்சித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் ரேவதி, தலைவாசல் விஜய் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து அழகு என்ற சீரியலில் நடித்து செம்ம ஹிட்டானது.

அதனை தொடர்ந்து தாலாட்டு என்ற சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். சின்னத்திரையும் தாண்டி  வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார் மலையாளத்தில் முதலில் டாப் ஹீரோ மம்முட்டியுடன் நடித்த அறிமுகமானார் தமிழில் மாண்புமிகு மாணவன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

மாண்புமிகு மாணவன் படத்தில் முதலில் சேலையை கட்டிக்கொண்டு நடித்தாராம் ஒரு சீன்னில் பஸ் ஏறுவதற்காக சேலையை கட்டிக் கொண்டு ஓடிப்போய் அந்த பஸ்சை பிடிக்க வேண்டும் ஆனால் அவர் சேலையில் இருந்ததால் ஓட முடியவில்லை உடனே  தளபதி விஜய் வந்து என் கையைப் பிடித்துக் கொண்டு ஓடி காட்டினார்.

இப்போது நினைத்துப் பார்க்கும்போது நடிகர் விஜய்யா எனது கையை பிடித்தார் என ஆச்சரியமாக இருக்கிறது என கூறினார். இப்பொழுதும் கூட நடிகை சுருதி ராஜ் பல்வேறு ஆள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தொடர்ந்து சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருப்பதால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது நிச்சயம் மீண்டும் ஒருமுறை டாப் நடிகர் விஜய், அஜித்துடன் இணைந்து ஆச்சரியம் இல்லை எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.