சொல்லமாட்டேன்னு சொல்லியே மொத்த கதையையும் உளறிட்டியே பங்கு.. கோட் படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் 5 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இதற்கான பிரமோஷன் வேலைகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. மற்றொரு பக்கம் பிரபலங்களின் பேட்டிகள் வைரலாகி கொண்டிருக்கிறது.

அதில் பிரேம்ஜியின் பேட்டி தான் என்னடா இவரு மொத்த கதையையும் சொல்லிட்டாரு என அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பொதுவாக படத்தை பற்றிய எதிர்பார்ப்பை உயர்த்துவதற்காக சில விஷயங்களை பட குழுவினர் வெளிப்படுத்துவதுண்டு.

ஆனால் இவரோ நான்தான் படத்தில் சினேகாவின் தம்பி. பெரிய தளபதியை நான் மாமா என்று கூப்பிடுவேன். இளைய தளபதி என்னை மாமா என்று கூப்பிடுவார் என ஒவ்வொரு ரகசியத்தையும் வெளியிட்டு வருகிறார்.

இது பத்தாது என்று விஜய்யும் நானும் செல்லும் காரின் நம்பர் சிஎம் 2026 என இருக்கும் எனவும் சொல்லி இருக்கிறார். அதாவது 2026 இல் நடக்கும் தேர்தலில் விஜய் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் அமருவார் என்பதைத்தான் சொல்லி இருக்கின்றனர்.

அதேபோல் விஜயகாந்தின் ஏஐ டெக்னாலஜி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் இது தவிர திரிஷா சிவகார்த்திகேயன் தோனி ஆகியோரும் கேமியோ ரோலில் வருகிறார்களாம். அதிலும் முக்கியமாக வெங்கட் பிரபு கூட ஒரு சீனில் தலை காட்டுவார் என்கின்றனர்.

இதுபற்றி பட குழுவினர் மழுப்பலாக பதிலளித்தாலும் இதுதான் உண்மை என்ற தகவல்களும் கசிந்து உள்ளது. ஆக மொத்தம் கடந்த சில வாரங்களாக கோட் ஃபீவர் ஆரம்பித்த நிலையில் இந்த சர்ப்ரைஸ் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.