எல்லா ஏரியாலயும் அண்ணன் தான் கிங்கு.. தெறிக்க விட்ட விஜய், கோட் 2வது நாள் வசூல்

விஜய் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி வெளியான கோட் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்திருக்கும் இப்படம் தற்போது அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் பற்றிய சில நெகட்டிவ் விமர்சனங்களை நெட்டிசன்கள் பரப்பி வந்தாலும் அடுத்த சில நாட்களுக்கு எல்லா தியேட்டர்களும் ஹவுஸ்புல் என்பதுதான் உண்மை. அதேபோல் படத்தில் விஜயின் நடிப்பு வழக்கம் போல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதுவே படத்தின் வசூலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதன்படி நேற்று தயாரிப்பு தரப்பில் இருந்து முதல் நாள் வசூல் 126.32 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதை அடுத்து இரண்டாவது நாளான நேற்று இந்தியா முழுவதிலும் கோட் 30 கோடி வரை வசூல் லாபம் பார்த்திருக்கிறது. அதேபோல் உலகம் முழுவதிலும் 50 கோடியை தாண்டி இருக்கலாம் என்கின்றனர்.

ஆக மொத்தம் முதல் இரண்டு நாட்களிலேயே கோட் 200 கோடி வசூலை நெருங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் நிச்சயம் இந்த வசூல் இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

அப்படி பார்த்தால் அடுத்த வாரம் இப்படத்தின் வசூல் 500 கோடியை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதை தற்போது சோசியல் மீடியாவில் கெத்தாக சொல்லி வரும் விஜய் ரசிகர்கள் எல்லா ஏரியாவுலயும் எங்க அண்ணன் தான் கிங் என கெத்து காட்டி வருகின்றனர்.