ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் விஜய் நடித்த கோட் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது. அதை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினார்கள். சிலருக்கு படம் பிடித்திருந்தாலும் சிலர் நெகட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்தனர்.
அதேபோல் அஜித்தை வைத்து ப்ரமோஷன் செய்துவிட்டு ரிலீசுக்கு பிறகு பல்டி அடித்து விட்டதாக வெங்கட் பிரபு அர்ச்சனா ஆகியோரை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி கோட்பட ரிலீஸ் சோசியல் மீடியாவில் ஒரு கலவரத்தை உருவாக்கி விட்டது.
ஆனால் இது எதுவும் வசூலை பாதிக்கவில்லை. அதன்படி முதல் நாளிலேயே இப்படம் 126 கோடிகளை வசூல் செய்தது. அதை தொடர்ந்து வந்த நாட்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகள் தான்.
அந்த வகையில் மூன்று நாட்களிலேயே கோட் 200 கோடியை தாண்டி ஆச்சரியப்படுத்தியது. விடுமுறை தினங்கள் என்பதும் இதற்கு ஒரு காரணம். ஆக மொத்தம் படம் வெளியான நான்கு நாட்களில் 288 கோடி ரூபாயை வசூலித்து விட்டதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.
மேலும் நேற்று விடுமுறை இல்லாத தினமாக இருந்தாலும் தியேட்டர்களில் கணிசமான கூட்டம் இருந்தது. அதன்படி ஐந்தாவது நாளில் கோட் 15 கோடி வரை வசூலித்தது. ஆக மொத்தம் இந்த ஐந்து நாட்களில் இப்படத்தின் வசூல் 300 கோடியை தாண்டிவிட்டது.
இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனால் கோட் படத்தின் வசூல் வார இறுதியில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து விரைவில் 500 கோடி என்ற இலக்கை இப்படம் எட்டி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.