நடிகர் விஜய் 90 காலகட்டங்களில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் வெற்றி என்ற ஒரு குறிக்கோளை அடைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு அதற்கு ஏற்றார்போல ஒவ்வொரு படமும் வெற்றியை கொடுப்பதால் தற்போது கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப் படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் தனக்கான இடமான no. 1 இடத்தை பிடிக்க தற்போது முயற்சிக்கிறார்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில் அதுபோன்று விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தையும் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பதால் விஜய்யின் மார்க்கெட் தற்போது தாறுமாறாக எகிறி உள்ளது இதன் காரணத்தினால் விஜய் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார் அதாவது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கும் ரஜினியை விட இவரது சம்பளம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது ஒரு திரைப்படத்திற்காக இவர் சுமார் 100 அல்லது 120 கோடி வாங்குவதாக கணிக்கப்படுகிறது. இந்த நிலையில் விஜயின் சொத்து மதிப்பு குறித்து சில விவரங்கள் வந்து உள்ளன. விஜய் படத்தின் சம்பளத்தையும் தாண்டி பிஎம்டபிள்யூ, ஆடி, மினி கூப்பர் போன்ற பல்வேறு விதமான உயர் ரக கார்களை தன்வசப்படுத்தி உள்ளதால் இவரின் சொத்து மதிப்பு தற்போது தாறுமாறாக எகிறி உள்ளது.
மேலும் பனையூரில் ஒரு வீடு, நீலாங்கரை, சாலிகிராமம் போன்ற இடங்களிலும் வீடுகளை வைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பார்த்தால் இவரின் சொத்து மதிப்பு சுமார் 410 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது இப்படி இருந்தாலும் மக்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்காக அவ்வப்போது பல உதவிகளையும் செய்து செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.