தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக வருபவர் தளபதி விஜய். இவர் தற்பொழுது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
அண்மையில் கூட புகைப்படங்கள் வெளிவந்து லியோ படத்திற்கான எதிர்பார்ப்பை எகுற வைத்து உள்ளது. இப்படி திரையுலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் விஜய் பெரிதும் பொழுதும் கிசுகிசுவில் சிக்கவே மாட்டார் ஆனால் கடந்த சில மாதங்களாக தளபதி விஜய் கீர்த்தி சுரேஷ் உடன் இணைத்து வைத்து கிசுகிசுக்கப்படுகிறார்.
அதில் ஹைலைட் என்னவென்றால்.. இருவரும் காதலிப்பதாகவும், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கீர்த்தி சுரேஷை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த செய்தி பெரிய அளவில் பிடித்து பின் அமைதியானது இந்த நிலையில் அதை மீண்டும் பெருசாக வெடிக்க வைத்துள்ளார் விமர்சகர் உமர் சந்து.
இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சொல்லி உள்ளது என்னவென்றால்.. விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் என்றும், இந்த விஷயம் விஜயின் மனைவி சங்கீதா கூட தெரியும் என கூறுகிறார். இதுபோன்று தொடர்ந்து உமர் சந்து பல நடிகர், நடிகைகளை பற்றி தனது சமூக வலைதள பக்கங்களில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
இதை கண்ட ரசிகர்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக உமர் சந்து இப்படி அடுத்தவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதாக கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த தகவல் முற்றிலும் பொய்யானதும் எனக் கூறிய பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.