கண்டுகொள்ளாத கலாநிதி மாறன்.! அன்றே அனிருத்துக்கு பரிசு கொடுத்த விஜய்.! வைரலாகும் புகைப்படம்

Vijay

Vijay gift : தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்த போதிலும் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இசை வெளியீட்டு விழா மற்றும் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68..

திரைப்படத்தில் நடிக்க விஜய் ரெடியாகிவிட்டார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என்றும் படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு சிம்ரன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியவர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இந்த நிலையில் விஜய் பிரபல இசையமைப்பாளருக்கு பரிசு ஒன்று கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. விஜயின் கத்தி தொடங்கிய லியோ வரை அனைத்த படங்களுக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

இவருடைய திறமையை பார்த்த விஜய் கத்தி பட நேரத்தில் அனிருத்துக்கு பிரம்மாண்டமான பியானோ ஒன்றை பரிசாக கொடுத்த உள்ளார் என கூறப்படுகிறது. அப்போது விஜய் மற்றும் அனிருத் நின்று புகைப்படம்  எடுத்துக் கொண்டனர். இதோ நீங்களே பாருங்கள்.

vijay and aniruth
vijay and aniruth