தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை தோழா மற்றும் மகரிஷி படத்தை இயக்கிய வம்சி அவர்கள் விஜயின் வாரிசு திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் பட பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அவர்கள் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதாஸ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகி பாபு ,சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
மேலும் விஜயின் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவித்துள்ளது இன் நிலையில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வாரிசு படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி செம வைரலானது.
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே காத்திருந்த ரசிகர்களை சந்தித்துள்ளார் விஜய். இது குறித்து வெளியான வீடியோகள் மற்றும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஒரு சில தினங்களுக்கு முன்பாக எங்கள் உடன் வந்து பேச வேண்டுமென்று அவசியமில்லை கையை காட்டினால் போதும் என ஒரு ரசிகர் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் அது கூட அவர் செய்யவில்லை என்று வெறுப்பில் அவர் பேசியிருப்பது நாம் அனைவரும் பார்த்து இருப்போம். ஆனால் தற்போது விஜய் அவர்களே நேரடியாக ரசிகர்களை வந்து சந்தித்து கைகளை அசைத்து அனைவரையும் உற்சாகத்தில் அழுத்தி உள்ளார்.
இதோ அந்த வீடியோ.
ரசிகர்களை உற்சாகப்படுத்திய விஜய்!#Sunnews | #Vijay | #Varisu | @actorvijay pic.twitter.com/6qOw0olv8w
— Sun News (@sunnewstamil) September 28, 2022