120 கோடி சம்பளம் வாங்கியும் அடங்காத பணத்தாசை.! ரஜினியின் வழியை கடைப்பிடிக்கும் விஜய்… வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டு தவிக்கும் தயாரிப்பாளர்கள்…

vijay
vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் நடிகர் விஜய் மற்றும் ரஜினி. இவர்கள் இருவருமே 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களாக இருந்து வருகிறார்கள். இதில் நடிகர் விஜய் மட்டும் ஒரு படத்திற்காக 125 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் அந்த சம்பளம் பத்தவில்லை என தற்போது ரஜினியின் யுத்தியை கையில் எடுத்துள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது உறுதி ஆகிவிட்டது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிசம்பரில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ரஜினியின் யுக்தியை நடிகர் விஜய் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது நடிகர் ரஜினி தன்னுடைய திரைப்படத்திற்காக சம்பளம் வாங்குவது மட்டுமல்லாமல் தன்னுடைய படம் எங்கெல்லாம் வெளியாகிறது அந்த படத்திற்கு வரும் லாபத்தில் பாதி ஷேர் வாங்கி கொள்கிறாராம். அதேபோல தளபதி 67 திரைப்படத்திற்காக நடிகர் விஜயும் ரஜினி யுத்தியை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யும் தன்னுடைய படங்கள் எங்கெல்லாம் வெளியாகிறது அங்கெல்லாம் தன்னுடைய படத்திற்கு வந்துள்ள வருமானத்தில் பாதி ஷேர் வாங்கலாம் என திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அறிந்த நெடிஷன்கள் முன்னணி நடிகரான விஜய இவ்வாறு செய்தால் அடுத்த தலைமுறைகள் இதே போல் செய்தால் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுவார்கள் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய படத்திலிருந்து சம்பளமும் வாங்கிக் கொண்டு ஷேர் கேட்பது மிகவும் தவறானது எனக் கூறி வருகிறார்கள்.