தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்திற்கு வாரிசு என்று டைட்டில் வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியானது.
மேலும் இந்த திரைப்படம் குடும்ப செண்டிமெண்டை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி அவர்கள் இயங்கி வருகிறார்.மேலும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இந்த திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படம் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியக திரிஷா அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் இணையுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த திரைப்படத்தில் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே வாரிசு திரைப்படத்தின் பட பிடிப்பு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிவடையும் என்று படக்குழு அறிவித்துள்ளது மேலும் இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாரிசு திரைப்படத்தின் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருவதால் நடிகர் விஜய் அவர்கள் சென்னையில் இருந்து அடிக்கடி ஹைதராபாத் சென்று வருகிறார். இன்று சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்ற அதே விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணம் செய்து இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் விமானத்தில் பயணிக்கும் போது நடிகர் விஜயுடன் சேர்ந்து புகைப்படத்தை எடுத்துக்கொண்டார். மேலும் இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அது மட்டுமல்லாமல் இதற்கு முன் இது போன்ற பயணத்தை நான் அனுபவித்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
பின்னர் நான் பயணிக்கும் போது எனது அருகில் விஜய் அவர்கள் இருந்தார் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறேன் என்று புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.