விஜய் முடிச்சிட்டு ஜாலியா இருக்காரு.. அஜித் ஸ்டார்ட் கூட பண்ணல.. பயில்வான் ரங்கநாதன் பேச்சாசல் கடுப்பான ரசிகர்கள்

Ajith

Ajith : தமிழ் சினிமாவில் இரு தூண்களாக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய். இருவருமே ஆரம்பத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அந்த வகையில் ராஜாவின் பார்வையிலே படம் வெளிவந்து பெரிய ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து நேருக்கு நேர் படத்தில் கமிட்டாகினர். தயாரிப்பாளர்கள் கொடுத்த குடைச்சல் காரணமாக அந்தப் படத்திலிருந்து வெளியேறினார்கள்.

அதன் பிறகு இரண்டு பேருமே படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. அதற்கு மாறாக இருவரும் தனது படங்களை வெளியிட்டு போட்டி போட்டு யார் பெரிய ஆளு என பார்க்க ஆரம்பித்தனர் அதன்படி பல தடவை நேருக்கு நேர் மோதியதில் விஜய் தான் வெற்றி பெற்றார்.

இருப்பினும் கடைசியாக அஜித்தின் துணிவும் விஜயின் வாரிசு படமும் மோதின இதில் விமர்சன ரீதியாக துணிவு படம் வெற்றி பெற்றது வசூல் ரீதியாக வாரிசு வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தும் இரண்டு ஹீரோ படங்களையும் பெரிய அளவில் எதிர்பார்த்த நேரத்தில் அஜித் படம் டேக் ஆஃப் ஆகாமலேயே இருந்து வருகிறது.

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் அஜித் விஜய் பற்றி பேசியது சமூக வலைதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் சொன்னது.. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் சினிமா உலகில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசாகிய இரு திரைப்படங்களும் 2023 பொங்கலில் ரிலீஸ் ஆனது இதனை தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகினார்கள் இதில் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து அந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

ஆனால் அஜித் விக்னேஷ் சிவனை கமிட் செய்த பின்னர் ரிஜெக்ட் செய்து தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. இதனால் தளபதி விஜய் நடித்து முடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்க போயிட்டாரு தல அஜித் இன்னும் படம் ஷூட்டிங் கூட ஸ்டார்ட் பண்ணல என பயில்வான் ரங்கநாதன் கூறி உள்ளார்.