ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்.? சூப்பர் ஸ்டாரின் ஆசை நிறைவேறுமா..

rajini-

சினிமா உலகில் இருப்பவர்களுக்கு பட்டங்கள் கொடுக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பல வருடங்களாக கட்டிக் காப்பாற்றி வருபவர் ரஜினி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன இதனால் அடுத்த படத்தை மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்பதில் ரஜினி அதிகம் கவனம் காட்டினார்.

அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களுடன் கதை கேட்டு வந்த நிலையில் நெல்சன் சொன்ன கதை ரொம்ப பிடித்துப் போகவே அந்தக் கதைக்கு உடனடியாக ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டு தற்பொழுது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ரஜினி சிறைச்சாலை உயர் அதிகாரியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ஜாக்கி ஷராப், விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன்..

மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த படம் குறித்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அண்மையில் கூட இந்த படத்தில் 30 நிமிட பிளாஷ்பேக் காட்சி எடுக்கப்பட்டது அதை ரஜினி பார்த்து மிரண்டு போய்விட்டாராம் அந்த அளவிற்கு அற்புதமாக வந்திருக்கிறதாம் இதனால் படகுழு ஜெயிலர் படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து படத்தை எடுத்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்காக ஏழு நாள் கால்ஷீட்டும் ரஜினி ஒதுக்கி உள்ளார் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி யாருடன் படம் பண்ண போகிறார் என்று தெரியவில்லை..

ஆனால் தற்பொழுது ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் வைரல் ஆகி வருகிறது ரஜினியின் கடைசி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டும் என ரஜினி ஆசையாக இருக்கிறாராம்.. அந்தப் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் 35 கோடி சம்பளமாக கேட்டால் கூட கொடுக்க ரஜினி ரெடியாக இருக்கிறாராம் அந்த படமே ரஜினிக்கு கடைசி படம் என்பது உறுதி என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.